பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பகல் மற்றும் இரவு உணவிற்கு தேவையான ஒரு சா (நான்கு கைப்பிடி) அல்லது அதற்கு அதிகமான உணவு இருக்கும் சுதந்திரமான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஸகாத்துல் பித்ர் கடமை ஆகும். மேலும் அரிசி போன்ற நாட்டின் முக்கியமான உணவு வகைகளில் ஒரு சா ஜகாத்துல் பிதர் கொடுப்பதும் ஆகுமாக்கப்பட்டுள்ளது.
ஸகாத்துல் பித்ராவிற்குரிய சட்டம் என்ன? அதற்குரிய அளவு எவ்வளவு?
கேள்வி: 12459
ஸகாத்துல் ஃபிதர் கொடுக்கப்படும் வரை ரமலான் நோன்பு செல்லுபடி ஆகாது எனும் ஹதீஸ் சரியானதா? (ஸஹீஹ்ஹானதா?)
மேலும் இந்த உறுதியான ஹதீஸ் அல்லது சரியான உறுதியான வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு நோன்பாளியான முஸ்லிமுக்கு ஸகாத்தின் அளவு (நிஸாப்) பூரணமடையாதிருந்தாலும் ஸகாத்துல் ஃபிதர் கொடுப்பது அவர் மீது கடுமையாகுமா?
Summary of answer
பதில்
Table Of Contents
ஸகாத்துல் பித்ர் யாரின் மீது கடமை?
ஈத் பெருநாள் தினத்தன்று பகலிலும் இரவிலும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான ஒரு சா உணவு ( நான்கு கைப்பிடி) அல்லது அதற்கு மேல் இருக்கும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஸகாத்துல் ஃபிதர் கடமை ஆகும்.
இதற்கான அடிப்படை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் கூறுகின்றார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், சுதந்திரமானவர்கள், அடிமைகள் அனைவர் மீதும் பேரித்த பழத்திலிருந்து ஒரு சா (நான்கு கைப்பிடி) அல்லது கோதுமை மாவிலிருந்து ஒரு ஸா (நான்கு கைப்பிடி) அளவை ஸகாத்துல் பித்ருக்கு கடமையாக்கியுள்ளார்கள். மேலும் அதனை மக்கள் தொழுகையை விட்டு வெளியேற முன்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார்கள். ( புகாரி, முஸ்லிம்)
மேலும் அபூ ஸய்த் அல் ஹுத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களோடு இருந்தபோது நாங்கள் உணவில் இருந்து ஒரு ஸா அல்லது பேரிச்சத்திலிருந்து ஒரு ஸா அல்லது திராட்சையில் இருந்து ஒரு ஸா அல்லது பாலாடைக்கட்டி இருந்து ஒரு ஸா என்பவற்றை ஜகாத்தும் ஃபித்ர் கொடுப்போம். ( புகாரி , முஸ்லிம்)
ஸகாத்துல் பித்ருடைய அளவு...
அரிசி அல்லது போன்ற நாட்டின் பிரதான உணவுகளில் இருந்து ஒரு ஸகாத்துல் பித்ர் கொடுப்பது ஆகுமாக்கப்பட்டுள்ளது. ஒரு சா எனப்படுவது... நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸா ஆகும் இது சராசரி மனிதனின் இரண்டு கைகளிலும் வைத்திருக்கக் கூடிய உணவுத் தொகையில் நான்கு கைப்பிடிகள் ஆகும்.
மேலும் ஒருவர் ஜகாத்துல் பித்ரை அலட்சியம் செய்தால் (கொடுக்காவிட்டால்) அவர் பாவம் செய்துவிட்டார். அதனை ஈடு (கழா) செய்வது அவர் மீது கடமையாகும் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீசினை பொருத்தவரை அதன் நம்பகத்தன்மை பற்றி எமக்கு தெரியாது.
எனவே நாம் உங்கள் வெற்றிக்காகவும் எனக்காகவும் உமக்காகவும் வார்த்தைகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துமாரும் நாம் அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
மூலம்:
ஆய்வு மற்றும் பத்வாவுக்கான நிரந்தரக் குழு (9/364)