69

லுஹா தொழுகை குரிய நேரம்.

கேள்வி: 22389

இஷ்ராக் மற்றும் லுஹா தொழுகைகளுக்குரிய பொருத்தமான நேரம் எது?

பதில்

# இஷ்ராக் தொழுகைக்கும் லுஹா தொழுகைக்கும் இடையிலுள்ள வேறுபாடு.

இஷ்ராக்தொழுகை என்பது லுஹா தொழுகையின் ஆரம்ப நேரத்தில் தொழப்படும் தொழுகையாகும். இவை இரண்டும் இரண்டு வெவ்வேறான தொழுகைகள் அல்ல. சூரிய உதயத்திற்கு பின்னர் அது ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்ந்தவுடன் உடனடியாக செய்யப்படுவதனாலேயே இதற்கு  இவ்வாறு  (இஷ்ராக்) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இஷ்ராக் தொழுகை என்பது லுஹா தொழுகையை அதனது ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும்.

(மஜ்மூஃ அல்ஃப்தாவா அஷ்ஷெய்க் இப்னு பாஸ் 11/101)

# லுஹா தொழுகைக்குரிய நேரம் எப்போது ஆரம்பம் ஆகும்?

லுஹா தொழுகையின் நேரமானது சூரியன் உதித்து அது குறிப்பிட்ட அளவு உயர்ந்ததிலிருந்து லுஹர் தொழுகையின் நேரத்திற்கு சற்று முன்னுள்ள நேரம் வரையிலாகும்.

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்கள் (லுஹா தொழுகை குரிய நேரம்) சூரியன் உதித்து கால் மணி நேரத்திலிருந்து லுஹர் தொழுகைக்கு முன்னுள்ள பத்து நிமிடங்கள் வரையாகும் என்று வரையறுத்துள்ளர்கள்.

(அஷ்ஷரஹுள் மும்தஹ்:122/4)

# லுஹா தொழுகைக்குரிய சிறந்த நேரம்.

"ஒட்டகங்களின் குட்டிகள் உணர்கின்ற அளவிற்கு சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் போது (அவ்வாபீன்) லுஹா தொழுவது சிறந்ததாகும்" (முஸ்லிம் : 748) (அல்ஃபதாவா அஷ்ஷெய்க் இப்னு பாஸ் 395/11)

என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றின் பிரகாரம் சூரியனின் வெப்பம் அதிகமானதன் பின்னரான நேரமே லுஹா தொழுகை கூடிய சிறந்த நேரமாகும்.

அறிஞர்கள் இதனை பகல் பொழுதின் கால் பகுதி கடந்தால் அதாவது சூரிய உதயத்திற்கும் லுஹர் தொழுகைக்கும் இடைப்பட்ட அரைப்பகுதி என்று வரையறுத்துள்ளார்கள்.

(அல் மஜ்மூஃ லின்நவவி 36/4 , அல் மூசுஅதுல் ஃபக்ஹியதுள் குவெய்த்திய்யா 224/27) என்பவற்றை பார்க்கலாம்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

மூலநூட்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்